மீண்டும் இணையும் ‘கொம்பன்’ கூட்டணி

 மீண்டும் இணையும் ‘கொம்பன்’ கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சுல்தான் திரைப்படம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 • 25 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !