நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நேற்று காலை 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

நேற்று முந்தினம் அவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். அதோடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வையும் செய்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பலரும் தடுப்பூசி காரணமாக தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறிய நிலையில், மருத்துவமனை தரப்பில் தடுப்பூசியால் மாரடைப்பு நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று வீட்டில் இருந்தே மயக்க நிலையில் தான் நடிகர் விவேக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், .அவரது இதய செயல்பாடு குறைந்து வருவதாக தெரிவித்தனர். அதோடு அவருக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோது இன்று காலை 4.35 மணி அளவுக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது.

 • 27 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !