67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு…. விருது வென்றவர்கள் யார்…. யார்?

 67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு…. விருது வென்றவர்கள் யார்…. யார்?

ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய திரைப்பட துறைக்கு உயரிய விருதாக கருதப்படும் இவ்விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், 2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படவில்லை. ஆதலால், 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

அதன் பட்டியலை பார்ப்போம்….

சிறந்த தமிழ் படம் – அசுரன்

சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)

சிறந்த நடிகர் – மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி)

சிறந்த நடிகை – கங்கனா ரணாவத் (பங்கா, மணிகர்னிகா)

சிறந்த இயக்குனர் – சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் – இந்தி)

சிறந்த படம் – மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்)

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் – விக்ரம் மோர்(கன்னடம்)

சிறந்த நடன அமைப்பாளர் – ராஜு சுந்தரம் (மகாராசி, தெலுங்கு)

சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் (விஸ்வாசம்)

சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை)

சிறந்த வசனகர்த்தா – விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரிசிறந்த ஒளிப்பதிவு – கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)

சிறந்த ஒலிக்கலவை – ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறந்த அறிமுக இயக்குனர் – மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் – கஸ்தூரி (இந்தி)

சிறந்த படத்தொகுப்பு – நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு)

சிறந்த பாடகர் – பி.பராக்(கேசரி, இந்தி)

சிறந்த பாடகி – சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி)

சிறப்பு பிரிவு, ஜூரி விருது – ஒத்த செருப்பு (தமிழ்)

 • 58 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !