மீண்டும் களமிறங்கும் கிருத்திகா உதயநிதி – ஹீரோ யார் தெரியுமா?

 மீண்டும் களமிறங்கும் கிருத்திகா உதயநிதி – ஹீரோ யார் தெரியுமா?

நடிகரும், தற்போதையா எம்.எல்.ஏ வான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா உதயநிதி. இவர் வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கிய படம் காளி. பல விமர்சனங்களுக்கு உள்ளானது. விமர்சனங்களுக்கு பெயர் போன ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு அவர் அளித்த பதில் வைரல் ஆனது. அதன் பிறகு அவர் இயக்க இருப்பதாக எந்த தகவலும் வெளிவரவில்லை. அனைவரும் அவரை மறந்தே இருக்கலாம்.

இப்பொழுது அவர் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக தன்யா நடிக்க இருக்கிறார். லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  • 3 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !