பத்து தல படத்திற்கான இசை பணிகளை தொடங்கிய இசைப்புயல்..!!

 பத்து தல படத்திற்கான இசை பணிகளை தொடங்கிய இசைப்புயல்..!!

பத்து தல படத்திற்கான இசைப்பணிகளை  இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான் தனது இசைப்பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் நார்தன் இயக்கத்தில், சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ம் ஆண்டு ஹிட்டடித்த திரைப்படம் மஃப்டி. தற்போது இந்த படத்தை ‘பத்து தல “எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது .  ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் .

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிலும் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தை குறித்த தகவல் என்னவென்றால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது இசைப்பணிகளை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

  • 13 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !