சிவகார்த்திகேயனுக்கு சன்பிக்சர்ஸ் கொடுத்த டீல்?

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முக்கிய காதாநாயனாக வளர்ந்து வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். வருத்தப்படா வாலிபர் சங்கத்தில் தொடங்கி இன்று வரை அவருக்கு பேமிலி ஆடியன்ஸின் ஆதரவு இருந்து வருகிறது.
அவருடைய டாக்டர் படம் ரிலீஸிற்கு காத்திருக்கிரது. டான் படம் கொரனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அயலான் இறுதிகட்ட பணியில் இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு சன் பிகசர்ஸ் கொடுத்துள்ள ஆஃபர் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் தயாரித்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் சன் பிகச்ர்ஸ்க்கு நல்ல வசூலை பெற்று தந்தது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு 5 படத்தில் நடிக்க 75 கோடி தருவதாக ஒரு ஆஃபரை அவருக்கு கொடுத்துள்ளது. அதுவும் இரண்டு வருடங்களுக்குள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த டீல் கொரனா நேரத்தில் சரியான வாய்ப்பு என அவரது நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றனர். சிவகார்த்திகேயன் இந்த டீலிற்கு சம்மதம் தெரிவித்தாரா இல்லையா என்ற தகவலுக்கு ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர்.