உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
அவார்டை திருப்பி கொடுத்தாரா பிக்பாஸ் பாலாஜி ?

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்டவர்களில் மாடல் பாலாஜி முருகதாஸும் ஒருவர். இறுதிவரை பட்டம் வென்ற ஜித்தன் ரமேஷ் அவர்களுக்கு கடுமையான போட்டியாளராக இருந்தார்.
பாலாஜிக்கு சமீபத்தில் நடந்த பிகைண்ட்வுட் அவார்ட் விழாவில் விருது அளிக்கப்பட்டது. அந்த விருதின் பெயர் “ Biggest sensation on reality television award”. அந்த விழாவின் ஒளிபரப்பு சமீபமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் அதில் பாலாஜி விருது வாங்கியது பேசியது எதுவுமே ஒளிபரப்பவில்லை என்ற கோபம் பாலாஜிக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் தான் வாங்கிய விருதை திரும்ப தர விருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பவில்லை என்பதுதான் உண்மையான பிரச்சனையா? இல்லை வேறு ஏதாவதா என அவருடைய ரசிகர்கள் பலர் குழப்பத்தில் இருக்கின்றனர். இதற்கு தெளிவான பதிலை அவர் தரப்பு அளிக்கிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.