“அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வோம்” – நடிகர் பிரஷாந்த் கவலை!

 “அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வோம்” – நடிகர் பிரஷாந்த் கவலை!

பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்று வரும் டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இவர் விரைவில் குணமாக வேண்டி பலரும் பிரார்த்தனை செய்துவரும் நிலையில், நடிகர் பிரஷாந்த் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் உடல்நலம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

…”பொதுமக்களின் கவலைகளை வெளிப்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஜென்டில்மேன் டிராஃபிக் ராமசாமி, இப்போது தனது உயிருக்காக போராடிக்கொண்டிருக்கிறார். அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன். அனைவரும் அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்வோம்” என பதிவிட்டுள்ளார்.

 • 6 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !