தீபிகா படுகோன் நடிக்கும் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2015 ஆம் ஆண்டு டெல்லியை சேர்த்த லெக்ஷ்மி அகர்வால் என்ற 15 வயது பெண்ணை,குட்டா என்ற இளைஞான் தன்னை திருமணம் செய்யுமாரு வற்புறுத்தி வந்தான்.இதை மறுத்த லட்சுமி மீது கோவம் கொண்டு அவன் நண்பனோடு சேர்ந்து அசிடியை ஊற்றினான்.இந்த செய்தி அப்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

அதன் பிறகு லட்சுமி ஆசிட் தாக்குதல் செய்பவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கினர். மேலும் இவர் டிவி நிகழ்ச்சி ஒண்டரை நடத்தி வருகிறார். ஆசிட் தாக்குதலால் பாதிக்க பட்டவர்களுக்கு உதவும் தனியார் தொண்டு நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார் .
லக்ஷ்மியின் வாழ்கை வரலாற்றை கதைக்கருவாக கொண்டு உருவாகும் ‘சஹாபாக்’ என்ற படத்தில் லெக்ஷ்மி அகர்வால் ஆக பிரபல பாலிவுட் நடிகர் தீபிகா படுகோன் நடிக்கிறார் .மேலும் இப்படத்தை மேக்னா குல்சர் இயக்குகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு தீபிகா மாறியுள்ளார் . இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.