சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். வட தமிழகம், புதுவை கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 15 சென்டிமீட்டரும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 சென்டிமீட்டரும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் கும்பகோணத்தில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.