Author: Inanout Cinema

முதலமைச்சருக்கு நன்றி கூறிய ராகவா லாரன்ஸ்! காரணம் இதுதான்

ராகவா லாரன்ஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார். தன் வீட்டின் அருகில் 20ம் மேற்பட்டவர்கள் கூடியதாகவும், அவர்கள் ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர்கள். கொரோனா லாக்டவுனால் இங்கே உணவு, இருப்பிடம் இல்லாமல் திணறுகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தை பிரிந்து நீண்ட நாட்காளாக உள்ளனர். திரும்பி செல்லவும் வழி இல்லை. அவர்களுக்கு நான் 15 நாட்களுக்கு உணவு வழங்குகிறேன். நீங்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராகவா லாரன்ஸ் […]

நடிகர் மஹத்தின் திடீர் அறிவிப்பு

இயக்குனர் ஹரி, நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், அருள்தாஸ், ஆர்த்தி போன்ற சிலரை தொடர்ந்து நடிகர் மஹத் ராகவேந்திராவும் தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக தனது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார். தனது சம்பளத்தை குறைத்துக்கொள்வது குறித்து மஹத் ராகவேந்திரா கூறியுள்ளதாவது ; “இன்றைக்கு சமூகமும் சினிமாவும் இருக்கும் சூழலில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் போன்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. நானும் கடந்த பத்து வருடங்களாக இந்த திரையுலகில் […]

கஷ்டத்தில் இருந்த போது உதவிய சிரஞ்சீவி…. கண்கலங்கிய சரத்குமார்

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பிரபலங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். அந்தவகையில், தெலுங்கு ஊடகம் நடத்திய நேரடி நிகழ்ச்சியில் வீட்டில் இருந்தபடியே கலந்துகொண்ட நடிகர் சரத்குமார், சிரஞ்சீவி குறித்து பேசும்போது கண்கலங்கினார். அதில் அவர் பேசியதாவது: சிரஞ்சீவி குறித்து பேச மேடைகள் கிடைப்பதில்லை. நான் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் எனக்கு உதவியுள்ளார். ஒரு முறை நான் பண பிரச்சினையில் இருந்தேன். அப்போது ஒரு தயாரிப்பாளர், […]

‘பாதுகாப்பாக இருங்கள்; ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருங்கள்’ – நாயகி ராஷ்மி கோபிநாத்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு நாடே முடங்கி கிடக்கிறது. அரசின் உத்தரவை மதித்து சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதில் சிலர் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக நல்ல ஆலோசனைகளையும் தருகின்றனர். யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு படம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ராஷ்மி கோபிநாத் மக்களுக்கு சில ஆலோசனைகளுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. “இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றுநோயாக இருக்கிறது. […]

தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு உதவிய அபி சரவணன்!

கொரோனாவின் கோரப்பிடியில் ஒட்டுமொத்த உலகமும் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அனைவரும் வீட்டிற்குள் இருக்க வேண்டியது அவசியம். இருந்தாலும் எனது வீட்டில் எனக்கு உணவு கிடைப்பது போல அனைவரும் உணவு அருந்துவார்களா? என்ற கவலை. எல்லோருக்கும் உதவிட என்னால் முடியாது எனினும் மதுரையில் நான் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு என்னாலான சிறிய உதவியை செய்யலாம் என முடிவெடுத்தேன். எனது பள்ளி நண்பன் கார்த்திக் தேர்வு செய்த 100 குடும்பங்களுக்கு ‘காருண்யா 5டி என்டர்டைன்மெண்ட்’ நிறுவனர் ஜெசியுடன் […]

‘கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் பஷீர்.. அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதுகுறித்து அரசாங்கம் ஒருபக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் தன் பங்கிற்கு கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கியுள்ளார் பஷீர். “கொரோனா கொரோனா வராதே.. எங்களை நீ என்றும் தொடாதே ” என்கிற இந்தப்பாடலை அறிவுமதி எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக […]
Page 1 of 43512345 » 102030...Last »
Inandoutcinema Scrolling cinema news