விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு பெண் குழந்தை

நடிகையும் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, பிரசவத்திற்காக மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அனுஷ்கா சர்மா இன்று பிற்பகல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக இருப்பதாக விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;-

ங்கள்் அன்பு, பிரார்த்தனை மற்றும் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை நீங்கள் மதிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறி உள்ளார்.
Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news