இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வாசம் ஆகும். இந்த படத்தில் அஜித் 2 வேடஙகளில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில நாட்கள் முன்னர் மும்பையில் தொடங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை வரும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதால், சூட்டிங்கின்போதே டப்பிங்க் பணிகளும் நடந்து வருகின்றன.
அதன்படி, நடிகர் அஜித் தனது முதல்கட்ட டப்பிங்க் பணிகளை பேசி முடிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விவேக், யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இன்னிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் செகண்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை தல ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள்.
தற்போது விஸ்வாசம் படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.