கைதி ரீமேக்கில் ஹீரோ இவர்தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க, கார்த்தி நடித்த கைதி படம், கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசானது. ஆக்‌ஷன், அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது. இதேபோல் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியான இப்படம் அங்கும் நல்ல வசூல் பார்த்தது.  

அஜய் தேவ்கன்

இதனிடையே டிரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியில் கைதி படத்தை தயாரிக்கிறது. இதில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், கார்த்தி நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 12-ந் தேதி ரிலீசாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news