பிரபல ரீமேக் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்?

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’. சாஷி இயக்கிய இந்தப் படத்தில் அய்யப்பனாக பிஜூமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இரண்டு அதிகாரிகளின் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்தது. படம் மிகப்பெரிய வெற்றியையும் அடைந்தது.

இந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய, தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அதே போல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை, தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். 

பவன் கல்யாண், சாய் பல்லவி

இந்த படத்தில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார். இதன்பின் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது அய்யப்பன் மற்றும் கோஷியின் மனைவிகள் கதாபாத்திரம் தான். அதன்படி பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடமும், ராணாவுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news