வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை !

பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகள் என எவரிடமும் எந்த கருத்துகேட்பு மற்றும் ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் பெரும்பான்மையை பயன்படுத்தி புதிய வேளாண் சட்டங்களை மத்திய மோடி அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் நிறைவேற்றியது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் கூறிப்பட்டதாவது:-

இந்த சட்டத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து இது தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க குழு அமைக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

இந்த குழு எங்களுக்கானது. இந்த பிரச்சனையை தீர்க்கவேண்டும் என நினைப்பவர்கள் இந்த குழுவில் பங்கேற்கலாம். இந்த குழு எந்த உத்தரவுமோ அல்லது தண்டனையோ விதிக்காது. இந்த குழு எங்களிடம் அறிக்கை மட்டுமே சமர்ப்பிக்கும்.

இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விவரம் அறியவே இந்த குழு அமைத்துள்ளோம். பிரச்சனையை தீர்க்க அமைக்கப்பட்டுள்ள குழுவை விவசாய சங்கங்கள் ஏற்காது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்
இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டுமென நாங்கள் நினைக்கிறோம். தொடர்ந்து போராடவேண்டுமென விவசாயிகள் நினைத்தால் அவர்கள் போராடிக்கொள்ளலாம்.
இந்த குழு இந்த வழக்கில் ஒரு அங்கம். வேளாண் சட்டங்களை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன் படி மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news