குழந்தையுடன் விளையாடும் சிம்பு இணையத்தில் வைரலாகும் கியூட் புகைப்படம் இதோ…

நடிகர் சிம்புவுக்கு தற்போது தமிழக அளவில் பல ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், கடந்த காலங்களில் அவரால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரை வைத்து படம் இயக்குவதை தவிர்த்து வந்தனர். படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவது, சில சமயங்களில் வராமலே இருப்பது, படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த சொல்வது என தொடர்ந்து இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.

இதற்கெல்லாம் முற்றி புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு ஒழுங்காக கோப்ரேட் செய்து வருகிறார். இந்நிலையில் சிம்புவின் ரசிகர் ஒருவர் அவரை காண படப்பிடிப்பு தளத்திற்கு தனது குழந்தையுடன் வந்துள்ளார். அப்போது அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சிம்பு கை குழந்தையை தூக்கி கொஞ்சிய அழகிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news