விஜய் சேதுபதி நடித்து இன்று(நவ., 15) வெளிவர வேண்டிய ‘சங்கத்தமிழன்’ படம் வெளிவருமா என்பது இன்றைய பேச்சு வார்த்தைக்குப் பிறகுதான் தெரிய வரும்.
இருந்தாலும் விஷால் நடித்து வெளிவர உள்ள ‘ஆக்ஷன்’ படத்தில் விஜய் சேதுபதி இருக்கிறார் என்ற ஆச்சரியத் தகவலை விஷால் தரப்பில் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்தப் படம் சில பல வெளிநாடுகளில் எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் புரிந்து கொள்வதற்கு வசதியாக அவர்கள் தமிழில் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் படம் ஆரம்பமாவதற்கு முன்பாக விஜய் சேதுபதி திரையில் தோன்றி அது பற்றி வெளியிடுகிறாராம்.