ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘டெடி’ திரைப்படம் ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துள்ளது.
ஆர்யா நடிப்பில் சக்தி செளந்தர்ராஜன் இயக்கியுள்ள படம் ‘டெடி’. திருமணத்துக்குப் பிறகு ஆர்யா – சயீஷா ஜோடியாக நடித்துள்ள முதல் படம் இது. இயக்குநர் மகிழ் திருமேனி, கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. கரோனா அச்சுறுத்தலினால் வெளியாகாமல் இருந்தது. ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டத
தற்போது ஹாட் ஸ்டார் ஓடிடி தளம் பெரும் விலை கொடுத்து ‘டெடி’ படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இந்த படம் மார்ச் 19 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஒரு வாரம் முன்னரே மார்ச் 12 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. மேலும் அதன் டிரைலர் இன்று இணையத்தில் வெளியாக உள்ளது.’டெடி’ படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.