cinema Indian cinema Latest News News

பிரபல நடிகை தீபிகா படுகோனே மருத்துவமனையில் திடீர் அனுமதி!!

இந்தி திரையுலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோனேவுக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. டாக்டர்களின் சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூனில் ஐதராபாத்தில், நடிகர் பிரபாஸ் உடனான படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, தீபிகாவுக்கு இதய துடிப்பு விகிதம் […]Read More

cinema Indian cinema Latest News News

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற விஜய்… வைரலாகும் வீடியோ!!

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் […]Read More

cinema Indian cinema Latest News News

நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!!போலீசில் பரபரப்பு புகார்..!

சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக நடிகர் விஷால் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடிகர் விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]Read More

cinema Indian cinema Latest News News

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் ‘இந்திரா தேவி’ காலமானார்!!

மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று ஹைதராபாத்தில் உள்ள சொர்க்க வாசஸ்தலத்திற்கு புறப்பட்டார். இந்திராதேவிக்கு கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இறப்பதற்கு முன் சிறிது நேரம் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோகமான செய்தியைப் பகிர்ந்து கொண்ட குடும்பத்தினர், “சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மனைவியும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தாயுமான ஸ்ரீ கட்டமனேனி இந்திராதேவி இன்று காலை காலமானார். இன்று காலை 9.00 மணி […]Read More

cinema Indian cinema Latest News News

முழு வீச்சுடன் நடைபெறும் வெங்கட் பிரபு படத்தின் படப்பிடிப்பு!!

இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, என்சி22 […]Read More

cinema Indian cinema Latest News News

கவனம் ஈர்க்கும் ‘பொன்னியின் செல்வன்’  ஸ்னீக் பீக் காட்சி!!

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன், கலை – தோட்டா […]Read More

cinema Indian cinema Latest News News

அக்‌ஷய் குமாரின் ராம் சேது பட டீசர் வெளியானது!!

ராமர் பாலம் என்பது தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியான ராமேசுவரம் தீவு என்றழைக்கப்படும் பாம்பன் தீவிலிருந்து இலங்கையின் வடமேற்கு கடற்கரையில் உள்ள மன்னார் வளைகுடாவுக்கு இடையே உள்ள சுண்ணாம்புப் பாறைகளால் ஆன சங்கிலித் தொடர் பாலம் ஆகும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தப் பகுதியில் சேதுசமுத்திரம் கால்வாய்த் திட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அப்போது, சுண்ணாம்புப் பாறைகளால் உருவாக்கப்பட்டிருப்பது ராமர் பாலம் என்றும், இதனை அகற்றி சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த தடை […]Read More

cinema Indian cinema Latest News News

‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பிற்கு தயாரான தனுஷ்!!வைரலாகும் போட்டோ!!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 28 ஆம் தேதி முதல் தென்காசியில் நடைபெற இருக்கிறது. தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்டமாக நடைபெற்றது . இப்படத்தின் படப்பிடிப்பு […]Read More

cinema Indian cinema Latest News News

அயோத்தியில் ‘ஆதி புருஷ்’ டீசர் வெளியீடு!!

‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்தியா நடிகர் எனப் பெயரெடுத்தவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதற்குப் பிறகு அவர் நடித்த ‘சாஹோ, ராதே ஷ்யாம்’ படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும், அவருக்கு பிரம்மாண்டமான படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது.தற்போது ‘ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே’ ஆகிய பிரம்மாண்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் ‘ஆதி புருஷ்’ படம் ராமாயணக் கதையாக உருவாகி வருகிறது. ஓம் ராவத் இயக்கும் இப்படத்தில் ராமர் […]Read More

cinema Indian cinema Latest News News

தள்ளிப்போகும் ருத்ரன்; தமிழ் புத்தாண்டை புக் செய்த ராகவா லாரன்ஸ்!!

தமிழ் திரையுலகில் பல வெற்றிப் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாம் லுக் போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !