cinema Indian cinema Latest News News

பிரபு சாலமன், அஷ்வின் படத்தின் ட்ரைலர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!!

தமிழ் சினிமாவில் ‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரபுசாலமன். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘காடன்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில், தற்போது ‘செம்பி’ என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அஷ்வின் குமார், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘டிரைடெண்ட் ஆர்ட்ஸ்’ மற்றும் ‘ஏஆர் எண்டர்டெயின்மெண்ட்’ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ்.கே பிரசன்னா இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘இதுக்கெல்லாமா கொலை பண்ணுவாங்க’ – ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் எஸ்.ஜே சூர்யாவின் பொம்மை ட்ரைலர்

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் வில்லனாகவும், வெங்கட் ராகவன் இயக்கும் ‘கடமையை செய்’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே ராதாமோகன் இயக்கும் ‘பொம்மை’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மருது பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இந்நிலையில் ‘பொம்மை’ படத்தின் ட்ரைலர் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விக்ரம்’ படத்தின் இரண்டு மாஸ் அப்டேட் – லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவு!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு உலக நாயகன் கமல் நடித்துள்ளப் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் வந்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள், இதுவரை அவர் நடித்த படங்களுக்கு இல்லாத வகையில் நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் ‘விக்ரம்’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் […]Read More

cinema Indian cinema Latest News News

நிகில் சித்தார்த்தா நடித்த ‘#கார்த்திகேயா2’ மோஷன் போஸ்டர்!!

கார்த்திகேயா 2 ‘ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் புதன்கிழமையன்று படத்தின் மோஷன் போஸ்டரின் முதல் பார்வையை வெளியிட்டனர், இது துவாரகாவின் மர்மங்களை முன்னிலைப்படுத்துகிறது.நடிகர் நிகில் சித்தார்த்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படத்தின் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் நிகில் சித்தார்த்தா , 2014-ல் வெளியாகி விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘கார்த்திகேயா’ படத்தின் தொடர்ச்சியாக இயக்குநர் சந்து மொண்டேடியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.”எங்கள் திரைப்படம் #கார்த்திகேயா2 தெலுங்கு, இந்தி, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. […]Read More

Uncategorized

யஷ் படத்தின் புதிய அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான படம் ‘கேஜிஎப்-2’. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது. மேலும், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய நிலையில், அமேசான் பிரைமில் ‘கேஜிஎப் 2’ படத்தை காண ரூ.199 தனியாக கட்டணம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘#விக்ரம்’ படத்தில் சூர்யா கதாபாத்திரம் என்ன?… வைரலாகும் புதிய போஸ்டர் !!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்ற கதாபாத்திரத்திலும், ஃபகத் ஃபாசில் அமர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீசிற்கு சில நாட்களே உள்ள நிலையில் […]Read More

cinema Indian cinema Latest News News

அரவிந்த் சாமி & ரெஜினா நடிக்கும் ‘#கள்ளபார்ட்’… ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு !!

90 களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர் அரவிந்த் சாமி ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி தொழிலதிபராக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அடுத்தடுத்து தனி ஒருவன், போகன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அரவிந்த்சாமி மற்றும் ரெஜினா நடித்துள்ள ” கள்ளபார்ட் ” படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பிரதமர் மோடி, இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !