Latest News News Tamilnadu

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 31,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31,255 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 486 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 3,12,386 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோவையில் சற்றே குறைந்துள்ளது தினசரி பாதிப்பு. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,937 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கோவையில் 4,734 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் […]Read More

cinema Latest News Tamil cinema

யூடியூபில் மாபெரும் சாதனை படைத்தது அஷ்வினின் ‘லோனர்’ பாடல்!

“குக்கு வித் கோமாளி” புகழ் அஷ்வினின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ லோனர்’ இசை ஆல்பம் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. “குக்கு வித் கோமாளி ” புகழ் அஷ்வினின் நடிப்பில் தனிமையை மையப்படுத்தி “லோனர்” என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைத்து இயக்கியுள்ளார் எடி கிரிஸ். விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் பிரேம் கிருஷ்ணா மேற்கொண்டுள்ளார். கிஷான் எடிட்டிங்கை கையாண்டுள்ளார். இப்பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் […]Read More

cinema Tamil cinema

பிரபல தயாரிப்பாளருடன் கைகோர்க்கும் வெங்கட் பிரபு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெங்கட் பிரபு, சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘மாநாடு’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தியுள்ள நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல தயாரிப்பாளர் ராக்ஃபோர்ட் முருகானந்தம் தயாரிக்கும் படத்தை வெங்கட் பிரபு […]Read More

cinema Latest News Tamil cinema

’நெற்றிக்கண்’ – விக்னேஷ் சிவன் கொடுத்த அப்டேட் !

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிந்து விட்டது. ரிலிஸுக்கு தயாரான நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் மிக அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு […]Read More

cinema Latest News Tamil cinema

பிரபல சீரியல் நடிகர் வெங்கட் சுபா மரணம்!

நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம். கொரோனவால் மக்கள் பலர் மடிந்து வரும் நிலையில் திரைத்துறையிலும் இறப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இதில் சிலரின் இழப்பு தமிழ் சினிமாவுக்கே ஆக இழப்பாகவும் மாறிவிடுகிறது. அந்த வகையில், நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிவி தொடர்கள், படங்களில் நடித்துள்ள […]Read More

IPL 2021 Latest News Sports

ஐ.பி.எல். போட்டிகள் – பி.சி.சி.ஐ. இன்று ஆலோசனை!

கரோனாவால் நிறுத்தப்பட்ட எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை எப்போது நடத்துவது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இன்று (29/05/2021) ஆலோசனை நடத்துகிறது. பி.சி.சி.ஐ.யின் தலைவர் சவுரவ் கங்குலி தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொளி மூலம் நடைபெற உள்ளது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் எஞ்சிய 31 ஆட்டங்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது தொடர்பாகவும், இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரைப் புறக்கணித்த நிலையில், வெளிநாட்டு வீரர்களை எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க வைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட […]Read More

cinema Tamil cinema

“லாக்டவுன் முடியட்டும் அப்புறம் பாத்துக்கலாம்” – ‘மாநாடு’ தயாரிப்பாளர் அதிரடி!

‘ஈஸ்வரன்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடித்துவரும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் முதல் சிங்கிள் […]Read More

cinema Latest News Tamil cinema

சூர்யா, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘நவரசா’ வெப் தொடரின் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்து வருகிறார். நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், பொன்ராம், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதில் சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், விக்ராந்த், ரோபோ சங்கர், […]Read More

cinema Latest News Tamil cinema

விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ படத்தைக் கைப்பற்றிய ஓடிடி தளம்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆண்டவன் கட்டளை’ படத்தை அடுத்து மணிகண்டன், விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு கூட்டணி இரண்டவது முறையாக கடைசி விவசாயி படத்தில் இணைந்துள்ளனர். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசாமான கெட்டப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உருவாகியிருக்கிறது. விவசாயத்தைக் காக்கப் போராடும் 80 வயது மனிதனின் போராட்டம் தான் இந்தப் படம். […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !