ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

ஆண்டின் முதல் பௌர்ணமியான இது மேலை நாடுகளில் ஓநாய் பௌர்ணமி என்று கூறப்படுகிறது. மற்ற பௌர்ணமி நாட்களை விட நிலவு அளவில் மிகப்பெரியதாக தெரியும் என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த ஓநாய் பௌர்ணமியில் கிரகணம் நடைபெறுவதால் இதற்கு ஓநாய் சந்திர கிரகணம் என நாசா விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

இது மற்ற நாட்களில் வரும் சந்திர கிரகணத்தை போல முழுமையாக நிலவை மறைக்காது. பூமியின் பகுதியளவு நிழலே சந்திரன் மீது பதியும் என்பதால் சந்திரனின் ஒளி மங்கி காணப்படும். இதை பெனும்ப்ரல் வகை சந்திர கிரகணம் என கூறுவார்கள்.

இன்று இரவு 10.30 மணியளவில் தொடங்கும் கிரகணம் அதிகாலை 3 மணி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த கிரகணத்தை ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல பகுதியிலிருந்தும் காணமுடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news