விக்ரமின் ‘கோப்ரா’ டீசர் வெளியீடு! எப்போ தெரியுமா?

நடிகர் விக்ரம்மின் 58வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை கூடிய விரைவில் முடித்து விட்டு அடுத்ததாக விக்ரம் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அதற்குள் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவின் காரணத்தால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அஜய்ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடி ஸ்ரீநிதிஷெட்டி நடித்து வருகிறார். மேலும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விக்ரமின் வித்யாசமான 7 விதமான தோற்றத்தில் வெளிவந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக படத்தின் டீஸருக்காக காத்திருக்கும் ரசிகர்கள் ட்விட்டரில் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் ” விக்ரமின் பிறந்த நாளுக்கு டீசர் வெளியிடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த இயக்குனர் ” சாத்தியம் இல்லை!! எல்லா ஸ்டுடியோக்களும் மூடப்பட்டுள்ளது…! நீண்ட நாட்கள் எடுக்கும் என் கூறியுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news