வணக்கம் சென்னை படத்திற்கு பிறகு மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் சுமோ. பிப்ரவரி 14 படத்தை இயக்கிய எஸ்.பி.ஹோசிமின் இயக்கியிருக்கிறார். ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இந்தோ – ஜப்பானிஸ் படமான இது சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். 35 நாட்கள் ஜப்பானில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
சிவா இந்தப்படத்திற்கு கதாநாயகனாக மட்டுமின்றி முதல் முறையாக திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது என்றும், நவம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது என்றும் தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.