மகனின் படத்தை தொடங்கி வைத்த கேப்டன்!!

நடிகர் விஜயகாந்தின் மூத்தமகன் பிரபாகரன் அரசியலில் களமிறங்கி சர்ச்சைகள் மூலம் பிரலபலமாகி வருகிறார். இளைய மகன் சண்முகப்பாண்டியன், திரைப்படங்களில் நடித்து வருகிறார். சண்முகப்பாண்டியன் திரை அறிமுகம் சரியாக அமையவில்ல. அதனால் அவர் அடுத்தடுத்த படங்களை வெகு கவனமுடன் தேர்ந்தெடுத்து வருகிறார்.மதிரை வீரன் படம் அவருக்கு ஒரு நல்ல இடத்தை பெற்றுத்தந்ததது. சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து சண்முகபாண்டியன் மூன்றாவதாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கிறது.

இப்படத்தின் பெயரை நேற்று ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்டார். மித்ரன் எனும் பெயரில் போலீஸ் கதையாக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் சண்முகப்பாண்டியனுடன் ரோனிகா சிங், அர்ச்சனா, அழகம் பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

சிறுத்தை சிவாவிடம் நான்கு படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பூபாளன் இப்படத்தை இயக்குகிறார் இந்த மித்ரன் படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது..

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news