லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்க, கமல் நடிக்கும் படம், இந்தியன் – 2. இப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவியது. இதில், ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் பேசப்பட்ட தொகையை குறிப்பிடும்படியாக, 1.76 லட்சம் கோடி என்கிற எண் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த நெட்டிசன்கள், கமலையும், லைகா நிறுவனத்தையும் கடுமையாக சாடினர். உடனடியாக, லைகா தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், இந்த போஸ்டரை வெளியிடவில்லை என்பதை குறிக்கும் விதத்தில், போஸ்டர் மீது, போலி என குறிப்பிட்டு விளக்கம் அளித்தது