நடிகை கங்கனாவை கைது செய்ய தடை!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறவர். நாட்டு நடப்புகள் பற்றி துணிச்சலுடன் கருத்து கூறுகிறவர். டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர் சில கருத்துக்களை கூறியிருந்தார்.


இந்த கருத்து இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி சய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது வழக்குப்பதிவு செய்ய பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பாந்திரா போலீசார் தேசத்துரோகம், இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராக நடிகை கங்கனா ரணாவத்திற்கு மும்பை போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவரை ஜனவரி மாதம் விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி கங்கனா போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம் கங்கனாவுக்கு புதிதாக சம்மன் அனுப்பக் கூடாதென காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதோடு தேசத் துரோக வழக்கில் கங்கனா ரணவத்தை வருகிற 25ந் தேதி வரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டது.
Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news