கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் டூப்லெசிஸ்..!

தொடர் தோல்விகளால் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார் தென்னாபிரிக்க வீரர் டூப்லெசிஸ்.

கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் அடைந்த தோல்வியினால் தனது ஒரு நாள் கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருந்தார் டூப்லெசிஸ்.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.ராஜினாமா குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார் அதில்” இத்தனை நாள் என் நாட்டின் அணியை வழி நடத்தி சென்றது என் வாழ்நாளில் மிகவும் பெருமையானதாக தருணம்” என குறிப்பிட்டிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் அடைந்த தோல்வியை அடுத்து டூப்லெசிஸ் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news