ஒரு கோடியை எட்டியதால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் சமந்தா

சென்னையைச் சேர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் சில தமிழ்ப் படங்களில் நடித்தாலும், அவரை தெலுங்கு திரையுலகம்தான் முன்னணியில் கொண்டு வந்தது. தொடர்ந்து அங்கு பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோர் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்ந்துள்ளது. இந்த தகவல்களை தாம் துள்ளிக்குதிக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள நடிகை சமந்தா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இதையொட்டி அவர் 10 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news