ஐபிஎல் காத்திருக்கட்டும்… சுரேஷ் ரெய்னா!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அதற்கு மறுநாளே ஐபிஎல் போட்டி நடத்துவது என்பது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா இது தொடர்பாக அவர் கூறியதாவது;- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.பி.எல். தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை முக்கியமானது.

மீண்டும் இயல்புநிலை திரும்பும்போது ஐ.பி.எல் தொடர் குறித்து யோசிக்கலாம். தற்போது உயிர் சேதம் ஏற்படுகிறது. இதனால் நமது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் உள்ளோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் நன்றாக இருந்தது. வலைப்பயிற்சியில் டோனி சிறப்பாக பேட்டிங் செய்தார். 3 மணி நேரம் பேட்டிங் செய்த அவர் இளம் வீரர் போல் துடிப்புடன் காணப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ல் உலக கோப்பை வென்றதை கொண்டாடி வருகிறோம். இறுதிப்போட்டியில் ஜாகீர்கான் பந்துவீச்சு, காம்பீர், டோனியின் பேட் டிங், யுவராஜ் சிங்கின் ஆல் ரவுண்டர் செயல்பாடு கை கொடுத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். சுரேஷ் ரெய்னா கொரோனா நிவாரண நிதியாக ரூ.52 லட்சம் நிதி வழங்கி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news