ஆராய்ச்சி படிப்பு மாணவியாக பார்வதி

தமிழில் பூ, மரியான், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. ஆனால் சமீபகாலமாக அவருக்கு மலையாளத்திலும் தமிழிலும் பட வாய்ப்புகள் இல்லை.. இன்னும் சொல்லப்போனால் சில காலத்திற்கு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என அவரே முடிவு எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள வர்த்தமானம் என்கிற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவியாக பார்வதி நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மாவர்கள் பிரச்சனை, அரசியல் விவகாரம் என ஏதோ சில சர்ச்சைகளில் சிக்கி வருவதை மையப்படுத்தியே இதன் கதையும் உருவாக்கப்பட்டுள்ளதாம். தேசியவிருது பெற்ற இயக்குனரான சித்தார்த் சிவா என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். பார்வதிக்கு ஜோடியாக வளர்ந்து வரும் இளம் நடிகரான ரோஷன் மேத்யூ நடித்துள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news