நிலவின் தென் பகுதியில் ஆய்வு நடத்துவதற்காக சந்திரயான் 2 விண்கலம் கடந்த திங்கட்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் திட்டமிட்டபடி சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புவி வட்டப்பாதையில் 230 கிலோ மீட்டர் விட்டத்தில் 45 ஆயிரத்து 163 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலம் வலம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக வரும் 26 ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புவி வட்டப் பாதையில் சுற்றி வரும் சந்திரயான் விண்கலம், ஆகஸ்ட் 14 ஆம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலகி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செல்லும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.