அனைவரும் பார்க்கவேண்டும்.. “பொன்மகள் வந்தாள்” படத்தை பாராட்டிய அட்லீ !

தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகைகள் மட்டுமே நீண்ட நாட்கள் நீடித்திருக்கமுடியும். அதில் மிக முக்கியமானவர் நடிகை ஜோதிகா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்த ஜோதிகா பின்னர் தொடர்ச்சியாக விஜய் , சூர்யா , அஜித் , விக்ரம் என அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து 2000ம் காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். பின்னர் நீண்ட இடைவெளியிக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த அவர் நாச்சியார் , காற்றின் மொழி , என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதையடுத்து தற்போது மீண்டும் கணவர் சூர்யாவே தயாரிப்பில் ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கும் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்துள்ளார். 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைதுள்ள இப்படத்தில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என முக்கிய நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். கொரோனா ஊரடங்கினாள் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் வருகிற மே 29-ம் தேதி (இன்று ) அமேசான் ப்ரைமில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

நேற்று இப்படத்தின் சிறப்பு பிரீமியர் காட்சி பிரபலங்களுக்காக காண்பிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த பிரபல இயக்குனர் அட்லீ ”  பொன்மகள் வந்தாள் படம். வலுவான செய்தி, உணர்ச்சி ரீதியாக இயக்கப்பட்டுள்ள படம். இயக்குனர் ஃப்ரெட்ரிக், ஜோதிகா மேம், சூர்யா சார், பார்த்திபன் சார் ஆகியோருக்கு இப்படம் பெருமை சேர்த்துள்ளது. அனைவரும் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news