September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

இந்த காலகட்டத்தில் அது இல்லாமல் எதுவும் நடக்காது – “பேய்பசி” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பொங்கிய “யுவன்”

சென்னை: ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசினார்கள்.

இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம்: முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது. யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையை மிகச்சிறப்பாக கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர், கதையை கூட கேட்கவில்லை. காஸ்ட்யூம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த படத்தில் லைவ் சவுண்ட் முயற்சி செய்திருக்கிறோம். வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர்: என் தந்தை 90களில் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டார். அதை நான் மீண்டும் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி. யுவனை மிகவும் தொந்தரவு செய்து நல்ல நல்ல பாடல்களை கேட்டு வாங்கியிருக்கிறோம். அவரும் இது என்னோட படம் என உரிமை எடுத்து எங்களுக்காக இசையமைத்து கொடுத்தார் என்றார்.

வெங்கட் பிரபு: ஹரி என்னுடைய சகோதரன் தான். அவனை என் படத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று அவனுக்கு என் மேல் கோபம். படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மாதிரி கதையெல்லாம் சொல்லி, புரிய வைத்து தயாரிப்பாளரை ஒப்புக் கொள்ள செய்வது கஷ்டம். அதை செய்து, விர்ச்சுவல் ரியாலிட்டி கான்செப்டில் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றார்.

நலன் குமாரசாமி: சினிமாவில் எனக்கு நல்ல நண்பர்கள் அறிமுகமாக காரணம் சீனு தான். சூது கவ்வும் படத்தில் பல விஷயங்கள் ஸ்ரீநிவாஸ் சொன்னது தான். இந்த படத்தில் பல புதுமையான, நல்ல விஷயங்களை எதிர்பார்க்கிறேன் என்றார்.

சந்தோஷ் நாராயணன்: என்னுடைய முதல் படத்தின் இசையை யுவன் ஷங்கர் ராஜா சார் தான் ரிலீஸ் செய்தார். இன்று அவர் படத்தின் இசை வெளியீட்டில் அவருடன் மேடையில் அமந்திருப்பது எனக்கு பெருமை என்றார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா: ஹரிக்கு சின்ன வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம். எங்கள் வீட்டில் கோபித்து கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி விட்டான். பின் நானே தயாரிக்க முடிவு செய்தேன், அதன் பின் இலங்கை சென்று விட்டான். தற்போது இந்த படத்தில் நடித்து விட்டான். நான் தான் இசையமைக்க வேண்டும் என்று சொன்னான். அன்புக்காக இசையமைத்திருக்கிறேன். அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டியது இந்த காலகட்டத்தில் அவசியம். காசு, பணம் தாண்டி அன்புக்காக எல்லோரும் முன்வர வேண்டும் என்றார்.

நாயகன் ஹரி பாஸ்கர்: நடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. என்னை இயக்குனருக்கு அறிமுகப்படுத்தி வைத்த பூர்ணிமாவுக்கு நன்றி. நான் உட்பட 4 பேர் புதுமுகங்களாக அறிமுகம் ஆகிறோம். எங்களை வைத்து லைவ் சவுண்டில் இந்த படத்தை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம். மிகப்பெரிய சாதனை அது என்றார்.

Pei Pasi Audio Launch

ஒளிப்பதிவாளர் டோனி சான்: இந்த படத்துக்கு லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம். யுவன் ஷங்கர் ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரின் கற்றது தமிழ் பாடல்களை கேட்டு மயக்கத்தில் இருந்திருக்கிறேன், அவர் படத்திலேயே நான் வேலை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் ஒளிப்பதிவாளர் டோனி சான்.

விழாவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, தீரஜ் ரெட்டி, இயக்குனர் கிருத்திகா உதயநிதி, தேனாண்டாள் ஹேமா ருக்மணி, எடிட்டர் மோகன் முருகதாஸ், கலை இயக்குனர் மதன், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news