Inandoutcinema - Tamil cinema news

தல அஜித்திடம் பழகி பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள் என கூறிய பிரபல நடிகர்

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடித்து இருக்கிறார்.

பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் தன் ரசிகர்கள் நலனுக்காக, தனது ரசிகர் மன்றங்களை கலைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து அஜித் தன் ரசிகர்களுடனான தொடர்பை குறைத்துக்கொண்டார்.

இதுக்குறித்து ஆரம்பம் படத்தில் அஜித்துடன் நடித்த கிஷோரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் தல அஜித் மிகவும் நல்ல மனிதர், ரொம்ப பக்குவமடைந்த [ Matured ] ஆள். ரசிகர் மன்றங்களை கலைத்ததால் அவருக்கு ரசிகர்களின் மேல் பாசம் இல்லை என்கிற அர்த்தம் கிடையாது. அவரிடம் நீங்கள் பழகி பார்த்தால் நீங்களே அதை புரிந்துகொள்வீர்கள் என நடிகர் கிஷோர் கூறியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news