போதை இளைஞர்களுடன் நடிகை யாஷிகா!?

இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். தற்போது உத்தமன், பீமராஜா படங்களில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்த்தில் உயர் ரக சொகுசு காரில் போதையில் வந்த இளைஞர்கள் ஒரு தொழிலாளி மீது மோதினர். படுகாயம் அடைந்த அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதை இளைஞர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்தும் இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது “அந்த இளைஞர்களுடன் ஒரு பெண்ணும் இருந்தார். அவரும் போதையில் இருந்தார். விபத்துக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் காரை ஓட்டியவர் மீது தான் வழக்கு போட முடியும். பயணித்தவர்கள் மீது போட முடியாது என்பதால் அந்த பெண்ணை விசாரித்து விட்டு அனுப்பி விட்டோம், அந்த பெண் நடிகையா என்பது பற்றி தெரியாது” என்றார்கள்.

இதுகுறித்து யாஷிகா ஆனந்த் கூறியிருப்பதாவது: என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பபடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. விபத்து நடந்த காரில் நான் செல்லவில்லை. ஆனால் அந்த காரில் இருந்தது எனது நண்பர்கள் தான். விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அவர்களை பார்க்க நான் வேறொரு காரில் அங்கு சென்றேன். அங்கு என்னை பார்த்தவர்கள் நானும் விபத்து காரில் பயணித்தாக செய்தியை பரப்பி விட்டார்கள் என்கிறார் யாஷிகா.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news