September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஆண்கள் சாதனையை தவிடுபுடியாக்கிய பெண்கள் கிரிக்கெட் அணி

பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் அயர்லாந் கிரிக்கெட் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அயர்லாந்தின் பந்து வீச்சை நொறுக்கித்தள்ளிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தது. தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 151 ரன்களும், மேடி கிரீன் 121 ரன்களும், அமெலியா கெர் 81 ரன்களும் விளாசினர். ஆண்கள் ஒரு நாள் போட்டியையும் சேர்த்து, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக இது பதிவானது. பெண்கள் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 455 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. தங்களது முந்தைய உலக சாதனையை தற்போது முறியடித்து உள்ளது. அயர்லாந்தின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் காரா முர்ரே 10 ஓவர்களில் 119 ரன்களை வாரி வழங்கினார். ஒரு நாள் போட்டியில் ஒரு பவுலரின் மோசமான பந்து வீச்சு இது தான். பின்னர் ஹிமாலய இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி சொற்ப ரன்களில் ஆல் அவுட் ஆனது. 35.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 346 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது. அயர்லாந்து அணியில் 7 பேர் 5 க்கும் குறைவான ரன்களை எடுத்துள்ளனர். அதிலும் மூவர் ரன்கள் எடுக்காதது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news