September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

மூக்கு பொடப்பா இருந்தா இப்படிலாம் பேச தோனுமா பிக்பாஸ்

சென்னை:  ஒரு லட்சம் கோடியில் தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்க ஒரு திட்டம் வைத்துள்ளேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விஷ்வரூபம்-2 படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான விளம்பர பணிகளில் இறங்கியுள்ள கமல்ஹாசன்  சென்னை, மும்பை, ஐத்ராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் மேம்படுத்துவதே எனது முழுநேர பணியாக இருக்கும். எனக்கு இதைவிட சினிமா முக்கியம் அல்ல. ஊழலை ஒழிப்பதே எனது முக்கிய நோக்கம். தமிழ்நாட்டை வலிமையாகவும், வளமாகவும் மாற்ற வேண்டும். அதற்கு ஊழலை ஒழிக்க வேண்டும்.  அதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் வகையில் பட்ஜெட்டில் ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளேன்.

அந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தால் மாநிலத்தில் நிலவும் லஞ்ச, ஊழலை அடியோடு ஒழித்து விடலாம். அரசியலுக்கு நடிப்பு திறமை உதவுமா என்று கேட்கிறீர்கள், விலங்குகளுக்கு கூட நடிப்பு திறமை இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்கின்றன. நடிப்புத் திறமையை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பலன் அடையும் போது, அதை ஏன் அரசியல்வாதிகள் மட்டும் பயன்படுத்தக்கூடாது?

எனக்கு கிராமப்பகுதிகளில் தான் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு என்னை சினிமா நபராக தான் அதிகம் தெரியும். அவர்கள் என்னை ஒரு சினிமாக்காரனாக மட்டும் அல்லாமல் அரசியல்வாதியாகவும் ஏற்றுக்கொள்வார்கள். அந்த நம்பிக்கையை அவர்களுக்கு உண்டாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதை நோக்கி பணிபுரிவேன் அதன்மூலம் நடிகனாக எனக்கு அவர்கள் தந்த அன்பையும் ஆதரவையும் அரசியல்வாதியாகவும் தரும் அளவிற்கு பணிபுரிவேன். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் வாதிகள் ஆட்சிக்கு வர பல வாக்குறுதிகள், திட்டங்கள், இலவசங்கள் அறிவிப்பார்கள். இதில் கமல்ஹாசன் ஒரு படி மேலே போய் ஊழலை ஒழிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவித்திருப்பது அரசியல் விமர்சகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news