September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

காலா படம் வெளியாவதில் கன்னடர்களுக்கு விருப்பம் இல்லை – கர்நாடக முதல்வர் குமாரசாமி

சென்னை: காலா படத்தை வெளியிடுவதில் கன்னடர்களுக்கு விருப்பம் இல்லை என கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்க்கு முன்பு காவிரி பிரச்னையில் கர்நாடக மாநிலத்துக்கு எதிரான கருத்தை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையில், காலா படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய அம்மாநில வர்த்தக தடை விதித்தது.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமார்சாமியிடம் காலா படம் விவகாரம் பற்ற பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு

காலா திரைப்படத்தை தடை செய்வது குறித்து அரசு தரப்பிலிருந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதையெல்லாம் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை பார்த்துக் கொள்ளும். காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதை கன்னடர்களுக்கு விருப்பம் இல்லை. மக்களின் முடிவில் தலையிட விரும்பவில்லை” என்று கூறினார்.

காலா படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், முதல்வரின் இந்த கருத்தால் காபா படம் கர்நாடகாவில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news