புஜாரா சதத்தால் வலுவான நிலையில் இருக்கும் இந்திய அணி

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டியை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நேற்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் நாளான நேற்று, இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் சிறப்பாக பேட்டிங் செய்தது. அறிமுக வீரர் மயங்க் அகர்வால் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் சேர்த்து இருந்தது. புஜாரா 68 ரன்களுடனும் விராட் கோலி 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியது. இந்திய அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

புஜாரா – விராட் கோலி ஆகிய இருவரும் மிகவும் நேர்த்தியாக விளையாடினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 17-வது சதம் இதுவாகும். 106 ரன்கள் சேர்த்த நிலையில் புஜாரா கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகானே ஓரளவு தாக்குபிடித்து 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ரிஷாப் பாண்ட் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஓரளவு சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். இந்திய அணி 169.4 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் சேர்த்து இருந்தபோது, தனது முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். ரோகித் சர்மா 63 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக பட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் பேட்டிங்கை துவங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 6 ஓவர் முடிவில் விக்கட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்துள்ளது. 3வது நாள் ஆட்டம் நாளை காலை இந்திய நேரப்படி 5 மணிக்கு துவங்கும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news