September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

இறுதி போட்டியில் சென்னையுடன் மோதப்போவது யார் ? பரபரப்பான கட்டத்தை எட்டிய ஐபிஎல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2–வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் ஐதராபாத்–கொல்கத்தா அணிகள் இன்று இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் இடையிலான 11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன்ரைசர்சும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்சும் இறுதிப்போட்டிக்கான 2–வது தகுதி சுற்றில் கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன. 2016–ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி கடைசியாக ஆடிய 4 ஆட்டங்களில் அந்த அணிக்கு தோல்வியே மிஞ்சி இருக்கிறது. தோல்வியால் சற்று தளர்ந்து போய் உள்ள ஐதராபாத் அணி இந்த ஆட்டத்தில் எழுச்சி பெற முயற்சிக்கும். ரஷித்கான், இங்குள்ள ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த லீக் ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்றைய ஆட்டத்தில் வாகை சூடும் அணி 27–ந்தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news