Inandoutcinema - Tamil cinema news

விஜயிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறும் பிரபல இயக்குனர்

நடிகர் விஜய் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இந்த படம் அரசியல் பின்னணியை கொண்ட கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் விஜயின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேற்று இரவு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட காணொளி ஓன்று இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் அனிதா மரணத்திற்கும் நேரில் சென்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயின் இந்த செயலுக்கு திரை பிரபலங்கள் உட்பட பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மற்றும் நடிகருமான அமீர் இணைந்துள்ளார். அவர் விஜயை பாராட்டியது மட்டுமில்லாமல் ரஜினியால் விமர்சித்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் பேட்டியில் கூறியதாவது : நான் முன்பு கூறியதை திரும்பவும் கூறுகிறேன்.

ரஜினி தூத்துக்குடி சென்றது காலா படத்தின் ப்ரமோஷன் மட்டுமே காரணம். அவர் எப்படி தூத்துக்குடி சென்று வந்திருக்க வேண்டும் என ஜூனியர் நடிகரான விஜயிடம் சீனியர் நடிகரான ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news