Inandoutcinema - Tamil cinema news

இனிமேல் இதுபோன்று உலகம் முழுவதும் பேரழிவுகள் ஏற்படும் – கமல் சொல்றது உண்மையா?

சென்னை: தமிழகத்தை தாக்கிய கஜா புயலைப் போன்று உலகம் முழுவதும் பேரழிவுகள் இனி ஏற்படும் என்று மக்களின் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

தமிழகத்தை கடந்த வாரம் தாக்கிய கஜா புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கின்றனர். மாநில் அரசு மூலம் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தாலும், அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அதியாவசிய பொருட்கள் ஏராளமாக தேவைப்படுகிறது. இதையடுத்து, நடிகர் – நடிகைகள், பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

கமல் பேட்டி..

இந்நிலையில், மக்கல் நீதி மய்ய கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்றார்.  சென்ற இடத்தில் ஒரு பெரிய குண்டை போட்டுவிட்டு வந்துள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதில் ஒரு பகுதி: கஜா புயல் இந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சேதமும் இவ்வளவு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கவில்லை. முதலில் சேதம் குறித்து சரியான தகவல் தெரியவில்லை. கடந்த 6 நாட்களாக எங்கள் மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் கிராமங்களில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். என்று கூறினார்.

பேரழிவுகள் தொடரும்..

நான் புயல் பாதித்த பகுதிகளை நேரில் சென்று பார்த்த பின்பு அங்கு இன்னும் நிறைய சேதம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஐ.நா. அமைப்பில் இருந்து ஏற்கனவே உலகம் முழுவதுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுத்திருந்தனர். இயற்கையால் பேரழிவு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்கள்.

உலக வெப்பமயமாதலில் ஒரு டிகிரி உயர்ந்தால் கூட என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று அவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதுபோன்றது இந்த கஜா புயல். இனியும் இதுபோன்று பேரழிவுகள் வரும், அது பேரிடியாக இருக்கும். எனவே இதுபோன்ற பேரழிவுகளில் இருந்து காப்பாற்றி கொள்வது குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கவேண்டும். தற்போது கஜா புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் அழிவாக அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடவேண்டும். மத்திய புயல் நிவாரண குழு தமிழகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக நிவாரண நிதியை வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கெனவே உலகம் முழுவதும் புயல், மழை, பூகம்பம், காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் மழையும் குறைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படுறது. ஆறு, ஏரி, குளங்கல் தண்ணீர் இன்றி வற்றிபோகிறது. இந்நிலையில், நடிகர் கமல் ஹாச்ன தெவிரிவித்துள்ள இந்த கருத்து பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news