டியர் சப்ஸ்கிரைபர்ஸ் – 2.0 படம் நமக்கு சொல்ல வருவது இது தான்!

சென்னை: வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகில்  கார்ப்ரேட் கம்பெனிகள் மணிதர்களை எப்படி பார்க்கிறார்கள்? இந்த கேள்விக்கான விடை தான் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், சங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள 2.0 படம்.

படம் பற்றி தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நிறைய பேசிவிட்டதால் நேராக விஷயத்துக்கு செல்வோம். ஏனென்றால் கதையும் சீன் 1ல் இருந்து அப்படித்தான் ஆரம்பிக்கிறது. வழக்கமாக ரஜினியை அறிமுகம் செய்யும் இடத்தில் ஸ்லோ-மோஷன் காட்சிகளோ, மாஸ் பீஜிஎம்’மோ இல்லாதது எதிர்பார்பில்லாமல் படம் பார்க்க வருபவர்களுக்கு சற்று நிம்மதியை தருகிறது. இதில், சமூகத்துக்கு தேவையான விஷியத்தை பிரம்பாண்டமாக கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சங்கர்.

கதை:

சாதாரனமாக போய்கொண்டிருக்கும் நகர வாழ்க்கையில் திடிரென ஒரு நாள் மக்களின் செல்போன்கள் கையில் இருந்து உருவிகொண்டுபோய் மாயமாய் மறைகின்றன. தொடர்சியாக நடைபெறும் சம்பவங்களில் ஒரு செல்போன் கடை முதலாலி, டெலிகாம் கம்பெனியின் சிஇஓ, அமைச்சர் ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்படுகின்றனர். இதனால், நாடே ஸ்தம்பித்துப்போகிறது. உடனே டாக்டர் வசிகரனாக வரும் ரஜினி, டாக்டர் போராவின் (இந்திரன் படத்தின் வில்லன்) மகன், அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட வள்ளுனர்கள் குழு கூடி காரணத்தை கண்டுபிடிக்க முயல்கின்றனர்.

அதில் விஞ்ஞானி ரஜினி, பிப்த்து போர்ஸ் என்று கூறப்படும் ஒரு விசித்திர விஞ்ஞான சக்தி தான் இதை செய்துகொண்டிருக்கிறது என்பதை கண்டு பிடிக்கிறார். அதை அழிக்க வேண்டும் என்றால் அதேபோன்று ஒரு விஞ்ஞான சதியான சிட்டி ரோபோவை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று கூறுகிறார். இதையடுத்து, பிப்து போர்சை அழிக்க சிட்டி ரோபோவாக ரஜினி மீண்டும் வருகிறார்.

இதற்கிடையில், பிப்து போர்ஸ் செல்போன் பயம்படுத்துபவர்களை ஏன் அழிக்க நினைக்கிறது.  அது ஏன் பறவை ரூபத்தில் வருகிறது. அக்‌ஷய் குமாருக்கும் பிப்து போர்சுக்கும் என்ன சம்பந்தம். செல்போன் டவர்களால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன. செல்போன் கம்பெணிகள் மணிதர்களை எவ்வாறு பார்க்கிறார்கள். இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது 2.0 படம்.

தொழில்நுட்பம்

டைட்டில் காட்ரில் இருந்தே இப்படம் கிராப்பிஸ் காட்சிகளால் நிறைந்திருக்கிறது. படத்தில் வரும் 90 சதவித காட்சிகளிலில் சீஜி விளையாடி இருக்கிறது.  அவர்களுக்கு ஒரு பிக் லைக். இசையை பொறுத்தவரை படத்துக்கு என்ன தேவையோ அதைமட்டும் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான். அக்ஷைகுமார் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் வசனத்துக்கு  பெரிய ஸ்பேஸ் இருந்தும் ஜெயமோகன் அதை பாதிவரை மட்டுமே நிரப்பி உள்ளார். நிரவ்ஷாவின் கேமரா கதைக்கு ஏற்றார்போல் சுழண்டு இருக்கிறது. சண்டை காட்சிகள் அதிரடியாக உள்ளது. கலை வேலை சிறப்பு. துணை நடிகர்கள் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம்.

விமர்சனம்

சாதாரண கதையை தனக்கே உரியதான திரைக்கதை பாணியில் ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சங்கர். பறவைகளுக்காக போராடி வாழ்ந்து, சாகும் பட்சிராஜன் அக்ஷைகுமார், நிலா எமிஜாக்சன், பிப்த்து போர்ஸ் உள்பட அனைவரும் தங்கள் கதாபாத்திறங்களை உனர்ந்து நடித்துள்ளனர். அதிலும் எமிஜாக்சன் பார்க்க நிஜ ரோபோவைப்போலவே உள்ளார். கமெடியும் செய்கிறார்.

செல்போன் பயன்பாட்டால், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தொலைதொடர்பு என உலகம் பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்திருந்தாலும், ஒரு 30 கிராம் சிட்டுக்குறுவியை காப்பாற்ற இயலாத வளர்ச்சி வளர்ச்சியே இல்லை என்கிறது படம். நிஜத்தில் மணிதர்களை பகடை காய்களாய் மாற்றி கார்ப்ரேட் நிறுவனங்கள் தொழில் செய்து வருகிறன. ஆனால், மனிதர்களுக்கு உதவுவது போல சிட்டி ரோபோ வந்து பறவைகளுக்காக போராடும் பிப்து போர்சை அழிக்கிறது. இதனால், சிட்டி வருவது மணிதர்களுக்கு உதவவா அல்லது கார்ப்ரேட் கம்பெனிகளுக்கா என்று ஒரு கேள்வி எழுகிறது.

மேலும், உலகில் ஆகச்சிறந்த சேவைகளை அளிக்கும் இந்த டெலிகாம் நிறுவனங்கள் மணிதர்களை வெறும் சப்ஸ்கிரைபர்களாக மட்டுமே பார்க்கின்றன என்ற உண்மையை இயக்குனர் சங்கர் தெரிந்தோ தெரியாமலோ இந்த படம் மூலம் நமக்கு உணர்த்திவிட்டு சென்றிருக்கின்றார். ரொம்ப நன்றி சார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news