September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

இந்திய அளவில் ஒரு படம் பண்ணனும்னு முடிவு செய்தோம் – பிரபு தேவா

இயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `தேவி’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு திரைப்படங்கள் இயக்குவதில் மும்மரமாக இருந்த பிரபுதேவா தற்போது நடிப்பில் கவனம் செலுத்திவருகிறார்.

தற்போது இயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் நடிகர் பிரபு தேவா இருவரும் இணைந்து லக்ஷ்மி திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். நடனத்தை மையப்படுத்திய லக்ஷ்மி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகிறது.

பிரபுதேவா உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி தித்யா முன்னணி கதாபாத்திரத்திலும் கோவை சரளா, கருணாகரன் எனப் பலரும் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் லக்ஷ்மி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னணி திரைபிரபலன்கள் பலரை கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் பிரபு தேவா கூறியதாவது : கதை சொல்லுறதுக்கு முன்னாடி விஜய் ஒரு டான்ஸ் படம் பண்ணலாம்னு ஐடியா சொன்னாரு. பண்ணா இந்தியா அளவுல பண்ணனும்னு சொன்னேன். அதுக்கு ஏத்த மாதிரி கதையும் அமைஞ்சிருக்கு.

ஏ.எல். விஜய் எடுத்த பெஸ்ட் படம் இதுதான். நல்ல படங்கள் நிறைய பண்ணிருந்தாலும் இதுதான் ஒரு இயக்குநரோட படமாக இருந்தது. இந்தியா முழுவதும் டான்ஸ் நிகழ்ச்சிகள்ல பெர்ஃபார்ம் பண்ண குழந்தைகள தேர்ந்தெடுத்து இந்தப் படத்துல நடிக்க வச்சிருக்கோம்.

டான்ஸ் மட்டுமல்ல பல இடங்கள்ல அழவும் வச்சிருக்காங்க. நிச்சயமா இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் ஜாலியாக இருக்கும் என நடிகர் பிரபு தேவா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news