இவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது – சீமான்

பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள் ஆகும். இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியுள்றாளார். மாரி செல்வராஜ் இயக்கிய முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த வாரம் வெளியான இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்னிலையில் இந்த படத்தை சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. சீமான், தோல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், சி.மகேந்திரன், மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, வேல்முருகன், கொளத்தூர் மணி, சுப. வீரபாண்டியன், பூவை.ஜெகன் மூர்த்தி, மல்லை. சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப்படத்தினை பார்த்து ரசித்துள்ளனர்.

அவர்களில் நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜையும் கட்டித் தழுவி, முத்தமிட்டு தனது பாராட்டுகளை வெளிப்படுத்தினார். பரியேறும் பெருமாள் திரைப்படத்தினைப் பற்றி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான திரு சீமான் அவர்கள் கூறியதாவது : நிறைய படம் பார்த்து விட்டு இது படமல்ல பாடம் என்று சொல்வோம்.

ஆனால், இந்த பரியேறும் பெருமாள் படம் பார்க்கும் போது, அவையெல்லாம் எவ்வளவு பொய்யான வார்த்தைகள் என்பது புரிகிறது. உண்மையிலேயே அப்படி சொல்ல வேண்டுமெனில் இந்த படத்தை சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் திரையில் ஒரு புரட்சியை இந்தப் படம் செய்திருக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய வயது, அனுபவம் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஆகச்சிறந்த படைப்பை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார்.

மிகப்பெரிய பெரிய தாக்கத்தையும், வலியையும் இந்தப்படம் கடத்தி இருக்கிறது. ஒரு படைப்பாளியாக மாரி செல்வராஜும், ஒரு தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நம் தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை பிள்ளைகள் நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news