September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

கர்நாடகாவில் மாஸ் காட்டிய தல அஜித் – தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து வரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், தம்பிராமய்யா, கோவை சரளா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை, ஹைதிராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வந்தது. சத்யஜோதி பிளிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார்.

இசை டி.இமான், வெற்றி ஒலிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் மூலம் இமான் முதல்முறையாக அஜித் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபன் எடிட் செய்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியாகியது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள்.

விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான விவேகம், தற்போது கன்னட மொழியில் வெளியாகிள்ளது. கர்நாடகாவில் 70 இடங்களில் 75 திரைகளில் என மொத்தம் 275 காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

இந்த படம் கமாண்டோ என்ற பெயரில் வந்துள்ளது. இப்படத்திற்கு கர்நாடக தியேட்டர்களில் முன்பதிவுகள் நிரம்பி விட்டதாம். படத்திற்கு பெரும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் இன்று மேலும் 5 திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் பால் அபிஷேகம், பட்டாசு வெடித்தல் என கர்நாடக தல ரசிகர்கள் திரையரங்கையே தெறிக்கவிட்டுள்ளனர்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news