Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் அஜித் படம். தல அஜித் படம் செய்த பிரம்மாண்ட சாதனை. விவரம் உள்ளே

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத்.

இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார்.

இன்னிலையில் கடந்த வருடம் வெளியான விவேகம் படத்தை தற்போது ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டது. அவை வெளியான ஒரே நாளில் 5.48 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான படங்களில் ஒரே நாளில் அதிக பார்வையாளர்களை கடந்த திரைப்படமாக தல அஜித்தின் விவேகம் திரைப்படம் அமைந்துள்ளது.

இதற்க்கு முன்னதாக சரைனொடு படம் 5.3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் இருந்தது. அதை விவேகம் திரைப்படம் முறியடித்துள்ளது. மேலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ஒரே நாளில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையும் தல அஜித்தின் விவேகம் படத்திற்கு கிடைத்துள்ளது.

தற்போது வரை இந்த படம் 86 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news