September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

அடுத்தடுத்து சாதனை செய்த தல படம். இணையத்தை தெறிக்கவிட்ட தல ரசிகர்கள்

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடிக்க இருக்கிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார்.

கடந்த வருடம் வெளியான விவேகம் படத்தை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்டது. அவை வெளியான ஒரே நாளில் 5.48 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான படங்களில் ஒரே நாளில் அதிக பார்வையாளர்களை கடந்த திரைப்படமாக தல அஜித்தின் விவேகம் திரைப்படம் அமைந்துள்ளது. இன்னிலையில் விவேகம் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது.

இவை வெளியான 9 நாளில் 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தற்போது வரை தல அஜித்தின் விவேகம் படத்தை 3 கொடியே 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளது குறிப்பிடத்த்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news